எலஹெர – ஹெட்டபொல வீதியின் பகமுன பகதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பகமுன, மினிபுரகம பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பகமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.