மோப்ப நாயின் உதவியுடன் ஹெரோயின் மீட்பு!

0
12

ஹிக்கடுவை, நலகஸ்தெனியாவில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டின் கழிப்பறை தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14.8 கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸ் மோப்ப நாய் “பெர்சி”யின் உதவியுடன் காலி பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் பேரில், காலி குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குறித்த வீட்டில் விரிவான சோதனை நடத்தினர். இருப்பினும், ஆரம்பத்தில் எந்த போதைப்பொருளும் கிடைக்கவில்லை. சந்தேக நபரின் கணவரும் குழந்தைகளும் வீட்டிற்குத் திரும்பும் வரை சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர், போதைப்பொருள் மோப்ப நாய் பெர்சி (எண். 1511) வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது இச்சோதனையில் பொலித்தீனில் சுற்றப்பட்டு, மேல் தள குளியலறையின் கழிப்பறைத் தொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயினை பெர்சி கண்டுபிடித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய வீட்டு உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here