சம்பளவிடயத்தில் கூட்டு ஒப்பந்த்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்கள் மீண்டும் மக்களை ஏமாற்றபோவதாக எம்.ராம் குற்றச்சாற்று

0
188

பெறுந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டுஒப்பந்த விடயத்தில் தோட்ட தொழிலாளர்களை இம்முறையும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட உள்ள தொழிற்சங்கங்கள் எமாற்றிவருவதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் எம் .ராம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றின் போது மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே இந்த குற்றச்சாற்றை முன்வைத்தார்.

கடந்த கூட்டுஒப்பந்தத்தின் போது தோட்டதொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுதருவதாக வாக்குறுதி வழங்கி மக்களை ஏமாற்றிவந்தவர்கள் இம் முறை அவர்களுக்கு முதலாளிமார் சம்மேளனத்துடன் எதுவும் பேசமுடியாது ஆகையால் இம் முறை தோட்டதொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் பெற்றுதர போகிறோம் என கூறாமல் கனிசமான சம்பளத்தை பெற்று கொடுக்க போவதாக கூறிவருகிறார்கள்.

ஆனால் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடபோகின்ற தொழிற்சங்களிடம் ஒன்று கேட்கிறோம இந்த கனிசமான சம்பளம் என்பது எவ்வளவு ஆனால் தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தை நாங்கள் நிர்ணயிப்பதற்கு முன்பு முந்தி கொண்டு தாங்கள் ஆயிரம் ரூபா 750 ரூபா 800ரூபா என கூறுவார்கள் ஆனால் இம் முறை அந்த நிலமை மாறிபோய் இருக்கிறது ஏன்என்றால் சம்பள விடயத்தில் பேச்சிவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்பு முதலாளிமார் சம்மேளனத்துடன் எவ்வாறு பேச்சிவார்த்தைகள் நடத்துவார்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்

ஆனால் மக்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும் தோட்டபுறங்களில் நாங்கள் தொழிற்சங்க அமைப்பாக இருக்கும் போது இந்த கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு சாரம்சம் இருக்கிறது இந்த கூட்டு ஒப்பந்த முறையை மாற்றியமைப்பதற்கு நாங்கள் இன்று நீதிமன்றங்களை நாடிபோய் கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்த்தில் கைச்சாதிட உள்ளவர்கள் இன்று தோட்ட நிர்வாகங்களோடு பேசிவருகிறார்கள் கூட்டு ஒப்பந்த பேச்சிவார்த்தைக்கு எங்களை தவிர வேறு எந்த தொழிற்சங்கங்களையும் அழைக்கவேண்டாம் அவர்கள் தோட்ட நிர்வாகங்களோடு நல்ல உறவுகளை வைத்து உள்ளவர்கள் என கூறிவருகின்றனர். அவ்வாறு நாங்கள் அங்கு சென்றால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட உள்ளவர்கள் பயந்து விடுவார்கள் இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கும் தோட்டநிர்வாகங்கள் இன்று பயந்தே செயல்படுகிறது அப்படி எதுவும் நடந்துருமோ இன்று அமைச்சர் பதவியை பெற்றுகொண்டு வீடமைப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள் வீதிகளை புனரமைத்து கொடுக்கிறவர்க்ள தோட்ட தொழிலாளர்களுக்கு கூடுதலான சம்பளத்தை கேட்பார்கள் என தோட்டநிர்வாகமும் இன்று பயப்படுகிறது

ஆக நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இணைய கூடாது என நினைக்கிறார்கள் ஏன் என்றால் நாங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு தற்பொழுது மேற்கொள்ளபட்டு வருகின்ற அபிவிருத்தியை போல் ஒரு கனிசமான சம்பளத்தை பெற்று கொடுத்து விடுவோம் என்ற பயம் அவர்களுக்கு காணபடுகிறது. ஆனால் இந்த தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளத்தினை இவர்கள் உடனடியாக பெற்று கொடுக்கமாட்டார்கள். தேர்தல் வரும்போது கனிசமான சம்பளத்தை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்று கொடுத்தவர்கள் எங்களை தவிர வேறுயாரும் மலையகத்தில் இருக்க முடியாது என மார்புதட்டி கொள்வார்கள் ஏன் என்றால் அவர்கள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கபார்கிறார்கள் .

அதற்கு ஏமாறுவதற்கு எங்கள் மக்கள் தயார்நிலையில் இல்லை ஆகவே எமது மக்களுக்கு இம் முறை அடிப்படை சம்பளம் அதிகபட்சமான சம்பளமாக பெற்று கொடுக்கபட வேண்டும் கனிசமான சம்பளம் என்றால் எவ்வளவு என்பதை மக்கள் கேள்வி கேட்கவேண்டும் இல்லாவிட்டால் அவர்களிடம் கூறுங்கள் எங்களுக்கென ஒரு அதிகாரசபை வரபோகிறது எங்களுக்கென ஒரு அமைச்சி இருக்கிறது உங்களுக்கு நியாமான சம்பளத்தினை பெற்று கொடுக்கமுயாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொள்ளுமாறு குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here