கண்டி – யட்டிநுவர பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான சம்பிக்க நிலந்த, அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோரின் மரணம் தொடர்பாகப் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, அவர்களால் எழுதப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
குறித்த கடிதத்தில் விஜேசிங்க என்ற நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலும் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேராதனை யஹலதென்ன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சம்பிக்க நிலந்த உள்ளிட்ட மூவரும் உடலமாக மீட்கப்பட்டனர்.