யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த வேலன் கனகலிங்கம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த 05ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு சென்ற வேளை, கன்ரர் ரக வாகனத்துடன் விபத்துக்கு உள்ளானார்.
விபத்தில் கணவன் – மனைவி இருவரும் படுகாயமடைந்த நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , கணவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.