யாழ். வலிகாமம் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக பௌர்ணமி தினமான இன்றய தினமும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது.
சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பொது மக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.