யாழில் மாணவர்களை கடும் வெயிலில் நிறுத்தி வைத்த அதிபர்!

0
173

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள பிரபல கல்லூரி அதிபர், கடந்த 7ஆம் திகதி மாணவர்களை வகுப்புக்கு வெளியே வெயிலில் நிறுத்தி வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் தேர்ச்சி அறிக்கைகளை பெறுவதற்கும், பெற்றோர் சந்திப்புக்குமாக பெற்றோரை பாடசாலை சமூகம் பாடசாலைக்கு அழைத்திருந்தது.

இந்த நிலையில் குறித்த சந்திப்புக்கு பெற்றோரை அழைத்து வராத மாணவர்களை, அதிபர் வகுப்புக்கு வெளியே வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் கல்லூரியின் அதிபரை தொடர்புகொண்டு கேட்டபோது, பெற்றோரை சந்திப்புக்கு அழைத்து வராத மாணவர்களுக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது.

இதன்போது மாணவர்கள் வெயிலில் நிறுத்தப்படவில்லை. ஒரு பாடவேளை மட்டுமே மாணவர்கள் வெளியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பாடசாலைக்கும், எமக்கும் இழுக்கு ஏற்படுத்துவதற்காக சிலர் இதனை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

நீங்கள் மாணவர்களை நிறுத்தி வைத்த இடத்தினை வந்து பார்வையிடலாம் – என அதிபர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here