யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று காலை (20) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்திசையில் வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது.
இதனை அடுத்து தாயும், மகளும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
இதன்போது எதிர்திசையில் பயணித்த பவுசர் ஒன்று மோதுண்டதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் இதன்போது காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




