யாழ்ப்பாணம் வருகிறது டி20 உலகக்கிண்ணம்!

0
34

டி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டி20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இம்முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.

பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகின்றது.

இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் நேற்று (22) உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதிவரை இந்த உலகக்கிண்ணம் இலங்கையில் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதற்கமையவே யாழ்ப்பாணத்துக்கும் கிண்ணம் எடுத்துவரப்படும் என்று தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here