யுத்தம் இடம்பெற்ற பல்வேறு நாடுகளில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்காக செயற்படும் சுமார் 24 திட்டங்களுக்கான அமெரிக்க நிதியை நிறுத்த வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.
இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் அடங்கும் என சர்வதேச செய்தி தளமான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.