ரசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரெயன் தாக்குதல்- எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்

0
27

ரசியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இத் தாக்குதலில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரசிய இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

மூன்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், குறித்த ட்ரோன்களில் ஒன்று சுட்டு விழுத்தப்பட்டபோது, கீழே விழுந்த வெடிபொருட்களினால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ பரவியதாகவும் ரசிய இராணுவம் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளது.

உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் ரசிய இராணுவம் கூறியுள்ளது.

அதேவேளை ட்ரோன் தாக்குதல் தமக்கு வெற்றியென உக்ரெய்ன் அறிவித்துள்ளது. உக்ரெயன் ஊடகங்களில் இச் செய்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இத் தாக்குதல் காரணமாக ரசியா எண்ணெய் உற்பத்தி சில மாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், ரசியவிடம் இருந்து எண்ணெய் பெறும் நாடுகளில் எரிபொருட்களுக்கு பெரும் தட்டுப்பபாடு ஏற்படும் என்றும் சர்வதே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு உள்ளான ரசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ரசியாவின் வடமேற்குப் பகுதியில், உள்ள கிரிஷி நகரில் உள்ளது. இது உக்ரெய்ன் நாட்டில் இருந்து சுமார் 1,500 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ஒரு நாளைக்கு 3,55,000 பரல் எண்ணெய் சுத்திகரிக்கிறது. இது ரசியாவின் மொத்த உற்பத்தியில் 6.4 வீதம் என கூறப்படுகிறது.

ஆகவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என்தை அறிந்தே உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here