ரணிலுக்கு ஆதரவளித்தோர் யானை சின்னத்தில் போட்டியிடாவிட்டால்…இ.தொ.கா எடுத்துள்ள தீர்மானம்

0
59

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்த அரசியல் கட்சிகள் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் பொதுக் கூட்டணியில் போட்டியிடாவிட்டால் அது குறித்து இ.தொ.கா புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

அந்தக் கூட்டணியில் இருந்து விலகி “சேவல்” சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (Ceylon Workers’ Congress ) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிலின்டர் சின்னத்தில் போட்டியிடுவது சாத்தியமில்லை எனவும் யானை சின்னத்தில் போட்டியிட்டால் பெருந்தோட்ட பகுதிகளில் அதிகளவான ஆசனங்களை பெற முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர், பதுளை (Badulla) மற்றும் நுவரெலியா (Nuwara Eliya) ஆகிய இரண்டு மாவட்டங்களிலாவது யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என முன் மொழியப்பட்டுள்ளது.

குறித்த விடயத்திற்கு அவர்கள் இணங்காவிட்டால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமனறத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளது.இதேவேளை இலங்கையின் இவ்வருட பொதுத் தேர்தலுக்கு நேற்று (04) வரை 122 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

இதுவரை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here