ரணிலுடன் பணியாற்றுவது இலகுவாக இருந்தது – முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி!

0
63

இலங்கையில் இருந்த ஜனாதிபதிகளில் எவருடனும் தனக்கு எந்த பிரச்சினைகளும் இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரம் பற்றி அறிந்தவர் என்பதால் அவருடன் பணியாற்றுவது இலகுவாக இருந்தது என்று தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நாட்டின் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்க்காணலில் இதுபற்று மேலும் கூறியிருந்த அவர், “இதன் போது தனது திருமண அனுபவம் பற்றி அவர் சுவாரஸ்யமாக கருத்து பகிர்ந்து கொண்ட போது , மூன்று வருட காலத்தில் தனது காதலியை பல்கலைக்கழகத்தில் அவர் கவனமாக பார்த்து கொண்டதாகவும், அதன் பலனாக 55 வருடங்களாக அவரது மனைவி அவரை பார்த்துக்கொள்கிறார் என்று கனிவாக பேசினார். இதனை பொருளாதார வார்த்தைகளில் கூறுவதாயின் மூன்று வருட முதலீடு ஐம்பத்ததைவருடங்களாக எனக்கு பயனளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இருவரும் ஆங்கில மொழிப் பேசிக் கொண்டதால் மொழிப் பிரச்சினை ஒன்று வரவில்லை என்றும். தனது குடும்பத்தில் அனைவரும் பொதுச் சேவையில் ஈடுபட்டவர் என்று கூறினார். சிறு வயதிலிருந்து மத்திய வங்கியிலிருந்து தனக்கு ஆர்வம் இருந்தது என்றும் கூறினார்.

அதேபோல் இலங்கையில் முதல் நிதி அமைச்சரான ரொனி டி மெல் அவர்களோடு பழகிய காலம் வாழ்வில் நல்ல அனுபவங்களை தந்தது என்றும் அதற்காக அவருக்கு தான் நன்றி கூறுவதாகவும் இதன் போது கூறினார்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் போது இலங்கை முந்திய நாடாக ஜப்பான் மட்டுமே இருந்தது. ஆசியாவில் இல ங்கை இடம் இரண்டாவதாகவும் வலுவாகவும் இருந்தது. 1966களில் சிங்கப்பூரை விடவும் இலங் கையின் மொத்த தேசிய உற்பத்தி அதிகமாக இருந்தது. இன்றைய பின்னடைவுக்கு இலங்கையில் சற்று விலை அதிகரித்தாலும் மக்களின் சடுதியான எதிர்ப்பு கிளம்வுதே காரணமாகும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல் தன்னிடம் இருக்கின்ற பணத்திற்கு உட்பட்டதாகவே தனது செலவுகள் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

1980 களிலிருந்து பொருளியல் ஆலோசகராக பணியாற்றிய அனுபவத்தில் எந்த ஜனாதிபதியுடனும் தனக்கு முரண்பாடுகள் இருக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனேயே நேரடியாக பணியாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருந்தது என்றும் அவர் பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர். அவருடன் பணியாற்றுவது மிக இலகுவானது.

மறுமுனையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்க குமாரதுங்கவின் அரசியல் நிலைப்பாடுகள் தனது அரசியல் நிலைப்பாடுகளுடன் சற்று ஒத்துப்போவதாக அமைந்தது என்றும், அவர்களுக்கும் நல்ல இடம் கிடைத்திருக்க வேண்டும் என்றும் இலங்கையில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவர்களால் ஆட்சியை கொண்டு நடத்துவது சற்று சிரமமானதாக அமைந்திருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்,இலங்கையில் காணப்பட்ட முரண்பாட்டு நிலைமைகள் காரணமாக 1983 களில் இலங்கைக்கு வரவிருந்த பல பில்லியன் முதலீடுகள் இழக்கப்பட்டது” என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here