ரணிலை பிறிந்த ரமேஷ் பத்திரன நாமலுடன் கைகோர்ப்பு!

0
38

காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெந்தர எல்பிட்டிய தேர்தல் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிடமிருந்து நியமனக் கடிதத்தை வியாழக்கிழமை(22) அன்று  பெற்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் அழைப்பாளராகவும் ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ரமேஷ் பத்திரன தனது ஆதரவைத் தெரிவித்தார்.

 காலி மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னாள் தலைவர்கள் குழுவுடன் ரமேஷ் பத்திரனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here