“ரணிலை விளக்கமறியலில் வைக்கவும்”

0
3

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அரச நிதி மோசடி தொடர்பிலான வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஸூம் தொழிற்நுட்பத்தின் மூலமாக முன்னெடுக்கப்படுகின்றது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், தனது வாய்மொழி சமர்ப்பிப்புகளை முன்வைத்தார்.

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்கும் விதிவிலக்கான சூழ்நிலைகளை பிரதிவாதி தரப்பு முன்வைக்காவிட்டால், விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here