நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல தோட்டபாதையின் நீண்டகாலமாக பாதுகாப்பற்ற நிலையில் உடைந்து காணப்படும் பாலத்தை புணரமைத்து தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்ரதல்ல தோட்டம் வங்கிஓயா தோட்டம் உட்பட 10 தோட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் மேற்படி பாதையின் பாலம் உடைந்த நிலையில் யூரியா உரையினூடாக மண் நிறப்பி வைக்கப்படுள்ளதுடன் பாலத்தின் ஒரு பகுதிகளிலுமுள்ள பாதுகாப்பு வேளி உடைந்து காணப்படுகின்றது
மூன்று பாடசாலைகளை கொண்ட குறித்த பிரதேசத்தின் பிரதான பாதையாகவும் நானுஓயா நகரிற்கு மேற்குறிப்பிட்ட தோட்ட மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பிரதான பாதையாகவும் கானப்படுகின்றது.
பிரதேச மக்களின் நலன் கருதி உடைந்து பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் குறித்த பாலத்தினை புணரமைத்து தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கினறனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்