ரம்புக்கனையில் இரு இளைஞர்கள் கொலை தொடர்பில் நால்வர் கைது

0
270

ரம்புக்கனை, ஹூரிமலுவ பிரதேசத்தில் இரு இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘ஹூரிமலுவே ஃபர்ஹான்’ என அழைக்கப்படும் மொஹமட் நிசார் மொஹமட் பர்ஹான், அப்துல் லத்தீப் மொஹமட் மற்றும் குற்றத்திற்கு உதவிய இரு சந்தேக நபர்களும் புத்தளம் நகரில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் இன்று (20) கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here