ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

0
130

வடக்கு ரயில்வே இன்று (05) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே ரயில்களை இயக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹவ மற்றும் ஓமந்த பகுதிகளுக்கு இடையிலான புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை புகையிரதம் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு அநுராதபுரத்தில் இருந்து பேரூந்துகள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும்டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here