மலையக ரயில் நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தினால் நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.
நல்லிரவு முதல் ரயில்வே அதிகாரிகளின் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தினால் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த இரவு நேர ரயிலும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலும் நாவலப்பிட்டி ரயில்வே நிலையத்தில் சமிஞ்சையில் அதிகாரிகளின் பணபகிஷ்கரிப்பால் தடைப்பட்டது.
11.05.2018 அதிகாலை 1 மணிக்கும் 1.30 மணிக்கும் நாவலப்பிட்டியை வந்தடைந்த ரயில்களை போக்குவரத்தை தொடரமுடியாமல் தடைப்பட்ட நிலையில் ரயிலில் வந்த பயணிகளினால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் நாவலப்பிட்டி பொலிஸாரினால் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்ப்பட்டதுடன் ரயிலில் வந்த பயணிகள் பஸ் வண்டிகளில் தமது பயணத்தை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
மு.இராமச்சந்திரன், அக்கரப்பத்தனை நிருபர்