பாதுகாப்புப் பணியாளர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகளை இடைநிறுத்துமாறு கோரி, சற்று நேரத்திற்கு முன்னர் திடீர் ரயில் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை புகையிரத நிலையத்தில் குறித்த பாதுகாப்பு ஊழியர் தாக்கப்பட்டுள்ளதாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையால் மாளிகாவத்தை புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் புகையிரதங்கள் மாத்திரமே பாதிக்கப்படுகின்றன. இது தொடர்பாக ரயில்வே பொது முகாமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.