உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் ஆண்டுக்கணக்கில் நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்
.இந்நிலையில், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
அப்போது அங்குள்ள ஒரு ஹோட்டலில் உக்ரைன் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ரஷ்ய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.




