ரஷ்யா நாட்டில் ஓட்டலில் தீ விபத்து….13 பேர் உயிரிழப்பு

0
229

பிரார்த்திப்ரஷ்யா நாட்டில் மாஸ்கோவில் உள்ள ஒரு ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஷிய நாட்டில் அதிபர் புதின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய வல்லர்சான ரஷ்யா, உக்ரைன் மீது ராணு தாக்குதல் நடத்திப் போர் தொடுத்து வருகிறது.

இந்த நிலையில்,ரஷ்யாவின் மாஸ்கோ அருகேயுள்ள ஒரு கோஸ்ட்ரோமா என்ற பகுதியில் உள்ள ஓட்டலில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்,வாடிக்களர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயன்று ஓடினர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைபுத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, 250 பேரை மீட்டனர்.

ஆனால், 13 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தீ விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில் ஒருவரைக் கைது செய்துள்ளனர், ஓட்டல் நிர்வாக இயக்குனரிடம் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here