ராஜஸ்தானிடம் மீண்டும் வீழ்ந்தது சென்னை

0
162

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் எடுத்தது. இதனை அடுத்து 203 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 170 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால் ராஜஸ்தான் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணி துடுப்பாட்டவீரர்கள் முதல் ஆறு ஓவர்களில் மிகவும் மெதுவாக விளையாடினர் என்பதும் 42 ஓட்டங்கள் மட்டுமே அடித்தனர் என்பதால் அதுவே தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பும் இலக்கை நோக்கி விரட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயன்றாலும் அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் தோல்வி அடைந்த சென்னை அணி இரண்டாவது முறையாக தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here