ராதா அண்ணன் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள் ஆறுமுகன் பணிப்புரை – முத்து சிவலிங்கம் தெரிவிப்பு!!

0
131

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் காங்கிரஸின் போசகரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் கலந்துகொண்டு மலையக மக்கள் முன்னணி தலைவரும்  அமைச்சரும்மான வே.இராதாகிருஸ்னனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தனதுரையில் தெரிவித்ததாவது.

அமைச்சர் இராதாகிருஸ்னனுக்கு விழா நடத்துகின்றார்கள். அதற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள் என இ.தொ.கா தலைவரும் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகத்திடம் தெரியப்படுத்தியதன் பின் இராதாகிருஷ்னனின் பெயரை கேட்டவுடன் எவ்வித தடையும் தயக்கமும் இன்றி விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தை தெரிவிக்க தனக்கு சம்மதம் தெரிவித்தார்.

அமைச்சர் இராதாகிருஷ்னன் 1987 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து சேவையாட்டி வந்தவர். காங்கிரசுக்கு வந்த இவரை சௌமிய மூர்த்தி தொண்டமான் தக்கவைத்து காங்கிரஸ் ஊடாக நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினராகவும், பின் தலைவராகவும் தெரிவாகினார்.

அன்று மாலைத்தீவு போன்ற நிலப்பரப்பை கொண்ட நுவரெலியாவுக்கு தலைவராகிவிட்டாய் என தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவால் பாராட்டு பெற்ற இவர் பின்  மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட இவர் மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி ஐயாவால் கண்டியை ஆண்ட மன்னன் இராஜசிங்கன் அம்மன்னனுக்கு நிகராக மத்திய மாகாணத்தை ஆட்சி  செய்ய வேண்டும் என ஆசியும் பெற்றார்.

இவ்வாறாக காங்கிரஸ் பிரதிநிதியாக இருந்து செயற்பட்ட இவர் அப்போதைய அரசாங்கம், தோட்டப்பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடியாது என பல காரணங்களை கூறியபோது தலைவர் தொண்டமானால் அரசுக்கு விட்ட சவால் மூலம் திரு. இராதாகிருஷ்னன் மலையகத்தில் அவர் பிறந்த கந்தப்பளை கோட்லோஜ் ஊருக்கு 3லட்சத்து 50ஆயிரம் சொந்த பணத்தை செலுத்தி முதன் முதலாக மின்சாரம் பெற்றார்.

இதன் பின் காங்கிரஸ் தொடர்சியாக தோட்டங்களுக்கு மின்சாரம் வழங்கியது இதனை நான் அமைச்சராக முன்னின்று வழங்கியமையால் மின்சார கண்ணா என்ற பட்டப்பெயரும் எனக்கு வைத்திருந்தார்கள் என புண்ணகையிட்டார்.

இதுமட்டுமின்றி 2500 தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் காங்கிரஸ் பிரதிநிதியாக சந்திரிக்கா அம்மையாரின் தனி மதிப்பும் இவர் பெற்று கொண்டார் என தெரிவித்த பிரதி  அமைச்சர் இடையில் தான் ஜெனிவா சென்றபோது வழியனுப்பி வைத்த இராதாகிருஷனன் என்னை வரவேற்க வரவில்லை காரணம் வேறு கட்சியில் இணைந்து கொண்டார்.

ஆனால் இதுவரை அவரை காங்கிரஸ்க்கு வாருங்கள் என நான் அழைக்கவில்லை. நல்ல நண்பராகவும், தம்பியாகவும் பழகி வருகின்றோம். எதற்கும் கோபடமாட்டார். முகம் சுழிக்கமாட்டார். தனது சமூகத்தின் தேவையை உணரந்து சேவை செய்பவர்.

இந்த நிலையில் இந்திய வம்சாவளி மகனுக்கு வெளிநாட்டில் பட்டம் வழங்கி பாராட்டு தெரிவிப்பதில் இ.தொ.கா பெருமையடைகின்றது என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here