கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு உதவ ஜனாதிபதி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர ராஜகருணா தனது மகன் ஹர்ஷன ராஜகருணாவின் உயர்கல்விக்காக உதவி கோரியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் தனது உறவினர் ஒருவருக்கு உதவி கோரியதாகவும் துணை அமைச்சர் கூறினார்.