ராப் பாடகரின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் விதமாக உருவாகியுள்ள படம், ‘பேட்டில்’. அன்புடன் அர்ஜுன், ஆராத்யா நடிக்கும் இந்தப் படத்தில் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா, முனீஷ்காந்த், சுருளி, திஹான், திவ்ய முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எலைட் டாக்கீஸ் சார்பில் கே.பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நாராயணன் இயக்கியுள்ளார்.
படம் பற்றி இயக்குநர் நாராயணன் கூறும்போது, “ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை முழுவதும் சொல்லும் முதல் தமிழ்ப் படம் இது. ராப் பாடகர்கள் ஒன்று கூடும் இடத்தில் ‘பேட்டில்’ என்ற நிகழ்வு நடைபெறும். அதைக் குறிக்கும் வகையிலும், நாயகன் எதிர்கொள்ளும் போராட்டங்களை விளக்கும் வகையிலும் இப்படத்துக்கு ‘பேட்டில்’ என்று பெயர் வைத்துள்ளோம்.
சரியாக இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம் பெறுகின்றன” என்று தெரிவித்தார். ஜீவா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
hindutamil