ரொப்கில் தோட்டத்தின் டன்பார் பிரிவில் காணி பிரிப்புக்கு எதிராக சத்தியாகிரகம்!!

0
147

பொகவந்தலாவ ரொப்கில் தோட்டத்தின் டன்பார் பிரிவில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் 30.03.2018 அன்று தொழிலுக்கு திரும்பியுள்ளனர்.தாம் காலம் காலமாக தொழில் செய்த தேயிலை மலையை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

எனினும் தோட்ட முகாமைத்துவம் தேயிலை மலையை பிரிப்பு தொடர்பாக எதிர்வரும் 9ம் திகதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுப்பதற்கு இணங்கியதற்கு ஏற்ப 30.03.2018 அன்று தொழிலாளர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு தமது பணிகளுக்கு திரும்பியுள்ளதுடன், சரியான தீர்வு ஒன்று கிடைக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தொழிலாளர்கள் தெரிவிக்கையில்,

இந்த தோட்டத்தில் தொழில் புரியும் 75 பேருக்கு தோட்டத்தின் தேயிலை காணிகள் அரை ஏக்கர் வீதம் பிரித்து கொடுப்பதற்கு முகாமைத்துவம் எடுத்த முடிவுக்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு காணியை பிரிப்பதற்கு தோட்டத்தின் முகாமையாளரும் கள உத்தியோகத்தரும் பல சூழ்ச்சிகளை செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த காணி பிரிப்பு காரணமாக தாம் வேலை நாட்களை இழப்பதாகவும் அத்துடன் தமக்கு 12 நாட்கள் மட்டுமே வேலை கிடைப்பதால் தமக்கு வருமானம் குறைவடைந்து தமது வாழ்க்கை கேள்விகுறியாக அமையும் என இவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு காணிகள் தமக்கு பிரித்து கொடுக்கப்படுவதனால் ஏக்கர் தூரத்தில் தாம் பணியாற்ற வேண்டி இருப்பதால் தமக்கு மிருகங்களிடமிருந்து பாதுகாப்பு இல்லை எனவும் தாம் சிறுத்தை, குளவி பன்றி போன்றவற்றின் தாக்கதலுக்கு உள்ளாக வேண்டி வரும் என்பதோடு தமக்கு உதவுவதற்கு எவரும் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவித்தனர்.

Photo (2) Photo (6) Photo (8) Photo (10)

மேலும் பெண்கள் மாத்திரம் உள்ள வீடுகளில் இந்த தேயிலை பகுதியில் செய்ய வேண்டிய களை எடுத்தல், கவ்வாது செய்தல், வடிகான அமைத்தல், உரமிடுதல் போன்ற வேலைகளை செய்வதற்கு பெண்களுக்கு முடியாத நிலையில் இந்த திட்டம் தமக்கு பெரும் சுமையாக காணப்படும் என இவர்கள் தெரிவித்தனர்.

பெண்கள் தற்போது குழுவாக வேலை செய்வதால் தமக்கு பாதுகாப்பு கிடைப்பதாகவும் தாம் தனித்து விடப்படும் நிலையில் தமக்கான பாதுகாப்பு கேள்வி குறியாக ஆகிவிடும் எனவும் இவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தமக்கு தற்போது கிடைக்கும் வைத்தியசாலை வசதி, அம்பியுலன்ஸ் வசதி, சிறுவர் பாரமரிப்பு வசதிகள், மரண சகாய நிதி கொடுப்பனவுகள் போன்ற உரிமைக்ள் பரிக்கப்படும் திட்டமாகவே இந்த காணி பிரிப்பு திட்டம் காணப்படுவதால் இந்த காணி பிரிப்பை தாம் முழுமையாக நிராகரிப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த காணி பிரிப்புக்கு தாம் உடன்படாவிட்டால் குடியிருப்புகளை இழக்க வேண்டி வரும் என தாம் மிரட்டப்படுவதாகவும் தெரிவிக்கும் இவர்கள் தற்போது தற்காலிகமாக கைவிடப்பட்ட இந்த போராட்டத்தை, காணி பிரிப்பு திட்டம் முழுமையாக கைவிடப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தை நடத்துவோம் என இவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here