நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை விடுவிக்க மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு வாகனம் குறித்த விசாரணைகள் தொடர்பாக அவர் நேற்று வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார்.
இதன்போது சுமார் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடுத்தப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.