இறுதி போட்டியானது எதிர்வரும் 20ம் திகதி ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். நான்காவது லங்கா ப்ரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டு தகுதிகாண் போட்டிகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
அதற்கமைய முதலாவது தகுதிகாண் போட்டி இன்று ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நண்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ள தம்புள்ள ஓரா அணியை இரண்டாவது இடத்தில உள்ள காலி கிளாடியேட்டர்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.
இதில், வெற்றிபெறும் அணியானது 20ம் திகதி ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டிக்கு முதலாவதாக தகுதி பெரும்.
தோல்வியடையும் அணியானது மூன்றாவது தகுதிகாண் சுற்றில் பங்கேற்கும்.
அதனை தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு இரண்டாவது தகுதிகாண் சுற்று போட்டி நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள பி-லவ் கண்டி அணியை நான்காவது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெறும் அணியானது மூன்றாவது தகுதிகாண் சுற்றில் பங்கேற்கும்.தோல்வியடையும் அணியானது தொடரில் இருந்து வெளியேறும். அதற்கமைய எதிர்வரும் 19ம் திகதி மூன்றாவது தகுதிகாண் சுற்று ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெறும்.
இதில் வெற்றிபெறும் அணியானது இறுதி போட்டிக்கு தகுதிபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.