​லயன்களில் இருந்து வெளியேற்ற அதிகாரம் இல்லை

0
230

கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை ஆர்.பி பிரிவில் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வரும் வீடுகளில் இருந்து அவர்களை அகற்ற தோட்ட நிர்வாகத்துக்கு எந்தவோர் அதிகாரமும் இல்லையென இ.தொ.கா பிரதி பொது செயலாளர் எம்.எஸ்.எஸ்.செல்லமுத்து தெரிவித்துள்ளார்.

,தொழிலுக்கு சமூகம் தராத பட்சத்தில் தொழிலாளர்கள் தங்களது வீடுகளை நிர்வாகத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து தோட்ட நிர்வாகம் கடிதம் வழங்கியுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கும் இ.தொ.கா பொது செயலாளரும்,அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இவ்வாறு தொழிலாளர்களை மிரட்டி தோட்ட நிர்வாகம் வழங்கியுள்ள கடிதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என்றும் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.

இறம்பொடையில் களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர் ஆர்.பி தோட்ட பிரிவுக்கு சென்ற காரணம் என்ன என்பது தொடர்பில் வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேநேரத்தில் இறம்பொடை ஆர்.பி பிரிவில் வசிக்கும் தொழிலாளர்கள் தமக்கான EPF, ETF பணத்தை தோட்ட நிர்வாகம் செலுத்த வேண்டுமென கோரி கடந்த இரண்டு மாதமாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இம்மக்களுடைய கோரிக்கையை ஏற்றுள்ள இ.தொ.கா? இவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும்.அதேநேரத்தில் அவர்களாக சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரின் காலத்திலிருந்து இத் தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுன்று பிரச்சினைகளை தீர்த்துள்ளது.

அதேநேரம் தொழிலுக்கு வரவில்லை என்கின்ற காரணத்தைக் குறிப்பிட்டு, தோட்ட லயன் அறைகளை மீள ஒப்படைக்க வேண்டும் என ரம்பொடை ஆர்.பி பிரிவில் வசிக்கும் 39 தோட்டத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அங்கு திடீரென இன்று (12) காலை முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தோட்டத்திற்கு வருகை தந்துள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here