லாஃப்ஸ் சமையல் எரிவாயு விநியோகம் தடையின்றி நடைபெறும் என லாஃப்ஸ் நிறுவனம் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தமக்கு அருகிலுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விநியோக கிளைக்கு சென்று கொள்வனவு செய்யலாம் அல்லது 1345 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் லாஃப்ஸ் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவையைத் தொடர்பு கொண்டு கொள்வனவு செய்யலாம் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.