லிந்துலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

0
167

வட்டவளை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெசிபன் தோட்டத் தொழிலாளர்கள் 160ற்கும் மேற்பட்டவர்கள் 09.08.2018 அன்று காலை 11 மணிக்கு தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.தோட்ட உதவி அதிகாரி தொழிலாளர்களை தகாதவார்த்தைகளால் பேசுவதாகவும், தொழிலாளர்களின் கோரிக்கையை தோட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் மறுப்பதால் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தற்போது தேயிலை மலைகளில் கொழுந்து மிகவும் குறைவாக உள்ளதால் ஒரு நாள் சம்பளத்திற்கு 18 கிலோ கிராம் கொழுந்து பறிக்க முடியாத நிலையில் தோட்ட நிர்வாகம் தற்போது கட்டாயம் 18 கிலோ பறித்தால் மாத்திரமே சம்பளம் வழங்க முடியும் என தெரிவித்துள்ளது. இதனை கண்டித்தும் தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் காடாகி உள்ளதால் இதனை துப்புரவு செய்து தருமாறும் உதவி அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டமெனவும் ஆர்பாட்டத்தின் போது தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here