நுவரெலியா மாவட்டத்தில் முதியவர்கள், இளைஞர் யுவதிகளுக்கு முதலாவது, இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நேற்றைய தினம் (22) காலை லிந்துலை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ராணிவத்தை கிராம சேவகர் பிரிவு, இல்டன்னோல் கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் பிறமாவட்டங்களில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட சுமார் 412 பேருக்கு பம்பரகலை விவேகாலயா தமிழ் வித்தியாலயத்தில் கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட லிந்துலை பொது சுகாதார பணிப்பாளர் வைத்தியர்கள் தலைமையில் இன்றைய தினம் காலை 9 மணி முதல் குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் நிலையங்களான பாடசாலைகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் , இராணுவம் மற்றும் விமானப்படை, பிரஜாசக்தி தொண்டர் படையினர், ஆகியோரின் ஒத்துழைப்புடன் சினோபாம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது இளைஞர் யுவதிகள், முதியவர்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
பா.பாலேந்திரன்