தொழிலாளர் தேசிய சங்கத்தின் லிந்துலை பிரதேச தோட்டக் கமிட்டி உறுப்பினருக்கான விஷேட கூட்டமொன்று நேற்று லிந்துலையில் இடம் பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் வேலு சிவானந்தனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் சிவானந்தன் ஆகியோர் உரையாற்றினார்.
மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன் , பிரதேச சபை உறுப்பினர் சுதாகரன் ,பிரதேச சபை வேட்பாளர்களான சேகர், ரமேஷ் ,ராஜதுரை , கோகிலா பிரதேச இணைப்பாளர் கார்த்திக்,பெரேரா இணைப்பாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.