லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பம்பரகலை குட்டிமலை தோட்ட குடியிருப்பு ஒன்றின் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்து 9ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
9ம் திகதி இரவு 11.30 மணியளவில் தனி வீடு ஒன்றின் கூறை சீட்கல் வெடித்து வீசப்படும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கண்டு உடனடியாக தீயை அணைக்கும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளனர், இதனால் தீ அனைக்கபட்டதாக தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது வீட்டின் ஒரு அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மற்றும் நுவரெலியா தடவவியல் பொலிஸார் குழுக்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
பா.பாலேந்திரன்.