லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை லோகி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த காரே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் 01.09.2018 அன்று அதிகாலை 5 மணியளவில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் படுங்காயம்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதியின் நித்திரையே குறித்த விபத்திற்கு காரணம் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
க.கிஷாந்தன்)