லோனக் கல்குவாரிபகுதியில் பாரியகல் சரிந்த விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடை!!

0
134

நோட்டன்பிரீஜ் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கினிக்தேன நோட்டன் பிரீஜ் பிரதான வீதயின் லோனக் கல்குவாரிபகுதியில் பாரியகல் ஒன்று சரிந்த விழுந்ததில் கினிகத்தேன நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளதாக நோட்டன் பிரீஜ் காவல்துறையினர் தெரிவித்தனர்.மலையகத்தில் தொடர்ந்து பெய்த கடும் மழையின் காரணமாக 03.06.2018.ஞாயிற்றுகிழமை விடியற்காலை 02மணி அளவில் இந்த பாரியகல் சரிந்து விழுந்துள்ளதாக நோட்டன்பிரீஜ் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இதனால் கினிகத்தேன நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.கினிகத்தேனையில் இருந்து நோட்டன் பிரீஜ் பகுதிக்கு செல்லும் வாகன சாரதிகள் லக்ஷபான கலுகொல்ல வழியாக நோட்டன் பிரீஜ்வழியாக மாற்று வீதியினை பயன்படுத்துமாறு நோட்டன் பிரீஜ் காவல்துறையின் வாகன சாரதிகளுக்கு கோறியுள்ளனர்.

இதேவேலை மலையகத்தில் தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக அட்டன் கொழும்பு பிரதான வீதி மற்றும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஊடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு காவல் துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

கினிகத்தேன நோட்டன் பிரீஜ் வீதியில் சரிந்து விழுந்துள்ள பாரிய கற்பாறைகளை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உதவியோடு  அகற்றுவதற்கான நடவடிக்கையினை நோட்டன் பிரீஜ் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.

00 07

எனவே காவல் துறையினரின் மறு அறித்தல்வரைக்கும் கினிகத்தேன நோட்டன்பிரீஜ் பிரதான வீதியின் போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டாமெனவும் காவல்துறையினர் கோறியுள்ளனர்.

 

(பொகவந்தலாவ நிருபர்ääஎஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here