விஷம் குடித்தவருக்குகூட பிழைத்துவிடுவார்கள்!
நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாகப் பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மை யோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.
அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மை யையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்துசாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லாநாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிரு க்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.
கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
வசம்பும்,, குழந்தையும்..
வசம்பு பத்தி இப்போ எவ்ளோ பேருக்கு தெரியும்..
வசம்பெல்லாம் இப்ப யாரும் யூஸ் பண்ற மாதிரி தெரியல.. முன்னெல்லாம் குழந்தை பிறந்ததும் வசம்பு வாங்கிடுவாங்க.. குழந்தைக்கு ஏதாவது ஒன்னுன்னா உடனே டாக்டர்.. இங்கிலிஷ் மருந்து தான்.
ஆனா.. நீங்க வசம்பு ஒன்னு வீட்ல ஸ்டாக் வச்சிங்கன்னா டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமில்ல.. எப்படி.. படிங்க..
வாயில வசம்பு வெச்சு தேய் என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா?
பாட்டி வைத்தியத்தில் அதற்கு பதில் இருக்கு..
வசம்பு பாரம்பரிய பராம்பரியமாக பயன்படுத்தி வரும் மருத்துவ பொருளாகும். இது குழந்தைகளின் வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த பொருளாகும். அதனால் தான் இது “பிள்ளை வளர்ப்பான்” என்றும் அழைக்கப்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு இந்த வசம்பை கையில் காப்பு மாதிரி கட்டுவார்கள். இது குழந்தையின் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை, வயிற்றில் ஏற்படும் அசெளகரியம், நெஞ்சு சளி போன்றவற்றை குணப்படுத்துகிறது. இந்த கையில் வசம்பு கட்டும் முறையை குழந்தை பிறந்த 12 வது நாட்களில் செய்கின்றனர்.
வசம்பை கடிப்பதால்
பிறந்த குழந்தைகள் தங்கள் கையில் கட்டப்பட்டுள்ள வசம்பை கடிப்பதால் அதன் மருத்துவ சத்து உள்ளே நுழைந்து வயிற்று பிரச்சினைகளை விரைவில் களைகிறது.
வயிறு வீக்கம்…
வசம்பை தீயில் சுட்டு பொடியாக்கி அதை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது வயிறு வீக்கம் அல்லது வயிறு உப்புசம் ஆகியவை சரியாகி விடுகிறது.
பூச்சு நெருங்காமை…
வசம்பை சாம்பலாக்கிய பொடியை தண்ணீருடன் குழைத்து குழந்தையின் நெற்றியில் பொட்டு இட்டு வர பால் வாடைக்கு எந்த பூச்சும் பல்லி போன்றவை குழந்தையை அண்டாது. வசம்பு பொடியை குழந்தைக்கு பூசி விடுவதாலும், படுக்கையை சுற்றி தூவி விடுவதாலும் குழந்தையை பூச்சிகள் அண்டாது.
வாய்வு தொல்லை….
வசம்பை சாம்பலாக்கிய பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து குழந்தையின் வயிற்றில் தடவி வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும்.
பால் மட்டும் போதும்
வசம்பையும் தேனையும் குழைத்து கொடுக்கும் போது குழந்தைக்கு பால் மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் விரைவில் வயிறு பிரச்சினை சரியாகி விடும்.
இருமல்….
வசம்பு மற்றும் அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்று வலிக்கு உதவுகிறது. நீண்ட நாள் மற்றும் வறட்டு இருமல் இருந்தால், வசம்பு மற்றும் அதிமதுரப் பொடியை சிறிது தேனுடன் கலந்து, இரவில் சாப்பிட்டு வர இருமல் வேகமாக குணமடையும்.
மூளை வளர்ச்சி….
இந்த மருந்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. மேலும் குழந்தைக்கு நல்ல பேச்சு திறன், நல்ல கண் பார்வை திறன், அழகு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் போன்ற எண்ணற்ற பலன்களை அள்ளி வழங்குகிறது.
வயிற்று போக்கு…
வசம்பு, காயம், அதிவிடயம், சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் கடுக்காய் தோல் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
இதை 1-2 கிராம் அளவு குழந்தைக்கு கொடுத்து வந்தால் சீரணமின்மை, வயிற்று போக்கு மற்றும் வாய்வு போன்றவற்றை குணமாக்கும்…