ரயில் நேர அட்டவணையில் நாளை (21) முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.வடப் பகுதிக்கான ரயில் நேர அட்டவணையில் நாளை (21) முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
அநுராதபுரம் முதல் மாகோ வரையான ரயில் தண்டவாளம் புனரமைக்கப்படவுள்ள நிலையிலேயே, ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கல்கிஸ்ஸை முதல் காங்கேசன்துறை வரை செல்லும் ரயில் உள்ளடங்களாக அனைத்து வடப் பகுதிக்குமான ரயில் நேர அட்டவணைகள் நாளை முதல் மாற்றப்படவுள்ளன.
இதேவேளை, வடப்பகுதிக்கான ரயில் சேவைகள் அடுத்த மாதம் முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.