குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காணப்படும் எட்டு கல்வி வலயங்களில் 31 பிரிவுகளில் இந்த வெற்றிடங்கள் காணப்படுகின்றன
வடமேல் மாகாணத்தில் 697 அதிபர் வெற்றிடங்களும் 5,098 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக அதிபர்கள் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் காணப்படும் எட்டு கல்வி வலயங்களில் 31 பிரிவுகளில் இந்த வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்படவில்லை எனவும் உடனடியாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.