வடிவேலுவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னால் இருந்து சிலர் தாக்கத் தொடங்கினர் என கூறிய நடிகர் ’காதல்’ சுகுமார்.தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவானாக இருப்பவர் வடிவேலு.
அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் இவர் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில் நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான ‘காதல்’ சுகுமார் பேட்டி ஒன்றில் வடிவேலு தொடர்பில் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், “கலகலப்பு என்கிற படத்தில் பொன்னம்பலத்துடன் நடிகர் வடிவேலுவின் உடல்மொழியில் நடித்தேன். அதன்பின், ஒருநாள் நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணியும் முத்துக்காளையும் வடிவேலு என்னைக் காண ஆசைப்படுவதாகக் கூறி அழைத்துச் சென்றனர்” என கூறினார்.
மேலும் கூறுகையில், “நானும் என் குருநாதரைக் காணப்போகிறேன் என்கிற ஆர்வத்தில் அவரை தனியறை ஒன்றில் சந்தித்தேன். என்னைப்போலவே நடிக்கிறாய் எனப் பாராட்டினார்.
பின், முத்துக்காளையும் போண்டாமணியும் அறையைவிட்டு வெளியேறியதும் நானும் கிளம்ப தயாரானேன்.
ஆனால், வடிவேலு என்னை இருக்க சொல்லி, ஏன் என்னை மாதிரியே நடிப்பேன் எனக்கூறி ஒவ்வொரு கம்பெனியாக ஏறிக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்டார். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை. ஒரு வாய்ப்பு கிடைத்தது அதனால்தான் அப்படத்தில் நடித்தேன் என்றதுடன் இனிமேல் உங்களைப்போல் நடிக்க மாட்டேன் என அவரிடம் சொன்னேன்.
திடீரென, பேசிக்கொண்டிருக்கும்போதே பின்னால் இருந்து சிலர் தாக்கத் தொடங்கினர். தாறுமாறாக அடிவிழுந்தது. ஏதோ நடக்க போகிறது என பயந்து அவர்களிடம் கெஞ்சி அங்கிருந்து தப்பி வந்தேன்”
”வீட்டிற்கு வந்ததும் ஏன் உடலில் அடிப்பட்டிருக்கு என மனைவி கேட்டதற்கு வண்டியில் இருந்து கீழே விழுந்துவிட்டேன் என கூறி சமாளித்தேன்” என கூறியுள்ளார்.