கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச்சென்ற ரயில் தன்டவாளத்திலிருந்து தடம்புரண்டதால் மலையகத்திற்கான ரயில் சேவை தடைப்பட்டுள்ளது
வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பகுதியிலே 18.12.2018 பிற்பகல் 2.30 மணியளவில் தடம்புரண்டதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் தடம்புரண்தையடுத்து பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் அட்டன் ரயில் நிலையத்தில் தரித்து நிற்பதுடன் தடம்புரண்ட ரயிலின் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் திருத்தப்பணி திறைவடைந்தப்பின் மீண்டும் ரயில் சேவை வழமைக்கு நிரும்பும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா