அட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, குயில்வத்த பிரதேசத்தில் பிரதான வீதி தாழ் இறங்கம் அவதானமாக செயல்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஆங்காங்கே மண்திட்டுகள் சரிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் பொதுமக்களை அவதானமாக செயற்பாடுமாறு கோரப்பட்டுள்து.
வட்டளை, குயில்வத்த பிரதேசத்தின் பிரதான வீதி இதற்கு ஒருவருடத்திற்கு முன்னரும் இவ்வாறு தாழ் இறங்கியதாகவும், இந்த வீதி திருத்தியமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் இன்று அதிகாலை தாழ் இறங்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அத்துடன், இந்தப் பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பிரதேசத்தில் நேற்று (15) சரிந்திருந்த மண் திட்டு அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.