வனராஜா தேயிலை தொழிற்சாலையில் 3000ம் கிலோ தேயிலை தூள் இனந்தெரியாதவர்களால் மறைத்து வைக்கபட்டதை மீட்ட பொதுமக்கள்!!

0
258

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பணிக்கு சொந்தமான டிக்கோயா வனராஜா  தேயிலை தொழிற்சாலையில் 3000ம் கிலோ தேயிலை துHளினை மறைத்து தொழிற்சாலையினுள் மறைத்து வைக்கபட்டதை தொழிற்சாலையில் பணிபுறிக்கின்ற தொழிலாளர்களால் மீட்கபட்டமை தொடர்பில் தொழிங்சாரலயின் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது இந்த சம்பவம் 04.01.2019 வெள்ளிகிழமை காலை 11மணி அளவில் இடம் பெற்றது
தொழிற்சாலையினுள் மறைத்து வைக்கபட்ட 3000ம் கிலோ தேயிலை துHள் எங்கிருந்து வந்தது இதை யார் மறைத்து வைத்தனர் இதனை விற்பனை செய்வதற்காக தொழிற்சாலையில் உள்ள உத்தியோகத்தர்களே மறைத்து வைத்திருக்க கூடும் எனவே
நாங்கள் கஸ்டபட்டு பறித்து தேயிலையை துHளாக மாற்றி அமைக்க பாடுபட்ட தொழிலாளர்களுக்கு இந்த கம்பணி காரர்கள் ஆயிரம் ருபாவை வழங்க தயங்குகின்றனர் ஆனால் தோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்று நடாத்துபவர்கள் இது போன்ற
திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதை நாங்கள் வண்மையாக கண்டிபதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

DSC09909 DSC09888

சம்பவ இடத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் முன்னால் மத்திய மாகாணசபை உருப்பினரான கணபதி கனகராஜ் மற்றும் முன்னால் மத்திய மாகாணசபை
உருப்பினர்களான சிங்கபொன்னையா மற்றும் எம்.ராம் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்று சம்பவம் தொடர்பில் கேட்டு அறிந்து கொண்டனர்.

இந்தசம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸ் நிலையத்தில் தோட்ட முகாமையாளரால் முறைபாடு செய்யபட்டுள்ளதாகவூம் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யபட வில்லை எனவூம் இது தொடர்பில் தீவிர விசாரனைகளை அட்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் . 3000ம் கிலோ தேயிலை துHள் ஒழித்து வைக்கபட்ட சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பெருந்தோட்ட நிருவனத்தின் மாவட்ட பணிப்பாளர் மஞ்சுலசமரகோனிடம்
தொடர்பு கொண்டு வினவிய போது தோட்ட முகாமையாளர் இல்லாத வேலையில் இந்த திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது எனவே சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு
அறிவிக்கபட்டுள்ளது இது தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டு வெகுசிக்கிரம் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வெகுவிரைவில் இனங்கண்டு அவர்களுக்கான நடவடிக்கை எடுக்கபடும் என அவர் மேலும் தெரிவித்தார்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

எஸ்.  சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here