அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு குழு ,பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 30/07/2021 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இக் குழு கூட்டத்தில் மலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வயது குறைந்த மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைவிலகி தொழிலுக்கு செல்வதை தடுப்பது தொடர்பாகவும் . கட்டாயக்கல்வி முறைமையை அவர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் விசேட மாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் மூலோபாயங்கள் மற்றும் தடுப்பூசிகளை அனைவருக்கும் உரிய முறையில் வழங்குவது தொடர்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஜனாதிபதியின் சௌபாக்ய வேலை திட்டத்தின் கீழ் பசில் ராஜபக்ஷ எண்ணக்கருவில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய பாலர் வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூபாய் 2500 ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அம்பகமுவ (பதில்)பிரதேச செயலாளர் திருமதி சாலிக்கா லிந்தக்கும்புர , பிரதேச அபிவிருத்தி குழு உப தலைவர் எஸ்.பி. ரத்னாயக்க, நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேல், மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி, ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் பாலச்சந்திரன், அம்பகமுவ பிரதேச சபை தலைவர் ஜயசங்க பெரேரா, அரச திணைக்கள அதிகாரிகள் ,பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
நீலமேகம் பிரசாந்த், சந்ரு