வலு சக்தி அமைச்சருக்கு எதிராக இன்று வாக்கெடுப்பு.

0
173
வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள அவநம்பிக்கைப் பிரேரணை இன்று வாக்கெடுப்புக்கு வருகிறது.

இதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை 5.30க்கு இடம்பெறும் என்று நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று நேற்று சபையில் உரையாற்றிய அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராத லிங்கம் அறிவித்தார்.

ஜேவிபியும் இதனை ஆதரிக்கவுள்ளது.

இதேவேளை, இந்த அவநம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா? என்பது தொடர்பாகச் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்களும், தடுப்புக்காவலில் உள்ள றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 3 உறுப்பினர்களும் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக இன்று அவர்களுக்கு இடையில் பிரத்தியேக கலந்துரையாடல்கள் இடம்பெறவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here