நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இன்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து சட்ட விதிகளை சாரதிகள் முறையாக கடைப்பிடிக்காததன் காரணமாகவும், நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.