வாக்கு சேகரிக்க முன் விட்ஸ் கார் 12 இலட்சம் சேகரித்த பின் வாகனங்களுக்கு வரி!

0
42

விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர்கள், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முகங்கொடுத்துவரும் துன்பங்கள் குறித்து அரசாங்கத்திற்கு எத்தகைய கவலையும் இல்லை. இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் மீது 50 வீத மேலதிக வரியை டிசம்பர் மாதம் வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேர்தல் மேடைகளில் 12 இலட்சத்திற்கு விட்ஸ் ரக காரை பெற்றுத் தருவோம் என்றனர். இன்று வாகன இறக்குமதிகள் மீது 50% மேலதிக வரிகளை விதித்து நுகர்வோர் உரிமைகள் சுக்குநூறாக உடைத்துள்ளனர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குருநாகல் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பிரியலால் அவர்களின் சமூக சேவை வாழ்க்கையின் 50 ஆவது ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் களத்தில் பிரதானமாக இரண்டு வகையான அரசியல் முறைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று பேசப்படுகின்ற, வாசிக்கப்படுகின்ற பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல் எனவும், மற்றைய பிரதான முறை பிரகடனப்படுத்தப்படும் விடயங்கள் மற்றும் பேசப்படும் விடயங்கள் நடைமுறை வாழ்வில் உண்மையான யதார்த்தமாக மாற்றப்படும் செயற்பாட்டு அரசியல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 2019 இலும் போலியான பிம்பங்களுக்கு மக்கள் ஏமாந்தனர்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்கள் ஊடாக பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி பல விடயங்களை வெளிப்படுத்தி, பிம்பங்களை உருவாக்கிக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை வென்றனர். பின்னர் நாடு வங்குரோத்தடைந்தது. சேதனப் பசளை சூத்திரத்தைக் கொண்டுவந்து விவசாயிகளை அழித்து, வரிசை யுகமொன்றை உருவாக்கி, பெரும் சோகத்தை உருவாக்கினர். பிரகடனத்திற்கும் பிரசாரத்திற்கும் மாத்திரம் சுருங்கி, செயற்கையான பாத்திரங்களை உருவாக்கி செயற்பாடில்லாத கேளிக்கை மற்றும் ஆடம்பர அரசியலே இதற்குக் காரணமாகும். நாடு வங்குரோத்தடைந்ததே இதன் மூலம் நடந்த ஒரே விடயமாகும் என எதிர்க்கட்சித் தெரிவித்தார்.

🟩 2024 இலும் போலியான பிம்பங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

2024 ஆம் ஆண்டிலும் நாட்டுக்கும் மக்களுக்கும் வளமான நாட்டை உருவாக்கி அழகானதொரு வாழ்க்கையை உருவாக்குவோம் என்று பிரஸ்தாபித்தனர். வளமான நாட்டின் அழகான வாழ்க்கைக்குள் 33% ஆல் மின்சாரக் கட்டணக் குறைப்பு, துறைமுகத்தில் இறக்கும் விலைக்கு எரிபொருள், இளைஞர் தலைமுறைக்கு 12 இலட்சத்திற்கு விட்ஸ் ரக கார் போன்ற பல்வேறு கதைகளை பேசினர், பிரஸ்தாபித்தனர். அக்கதைகளைச் செயலில் மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. பொய்யும் புரட்டும் ஏமாற்று வித்தைகளுமே நாளுக்கு நாள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களும் ஒட்டுமொத்த மக்களும் தற்சமயம் அரசியலால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என என எதிர்க்கட்சித் தெரிவித்தார்.

🟩 பெற்றுத் தருவோம் என கூறிய 150 ரூபா உத்தரவாத விலையும் இன்று இல்லை.

நாட்டில் விவசாயிகள் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக இருந்தபோதிலும், இந்த விவசாயிகளை ஏமாற்றி, வயல்வெளிக்குச் சென்று விவசாயிகளைச் சூழ்ந்துகொண்டு நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையை பெற்றுத் தருவோம் என கூறினர். இந்த உத்தரவாத விலையை நாட்டின் சட்டமாக மாற்றித் தருவோம் என்றும் கூறினர். இருந்த போதிலும் அது நடக்கவில்லை. ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகிறது என்பதை அரசாங்கம் அறிந்திருந்தும் உத்தரவாத விலை 120 ரூபாவாக நிர்ணயித்தது. இதன் மூலம் விவசாயிக்கு 17 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திவிட்டு அரசாங்கம் வீண் பெருமை பேசிக் கொண்டு வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

🟩 நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியே இவர்களுக்கு தேவை.

அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தி, நலன்புரி, நிவாரணம் அல்லது சேவையல்ல, மாறாக, நாட்டில் தனி கட்சி ஒன்று மாத்திரம் ஆட்சி செய்யும் சர்வாதிகார ஒடுக்குமுறை ஆட்சியை ஸ்தாபிப்பதே இவர்களின் நோக்கமாகும். இளைஞர் சங்கங்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள், கிராமிய சங்கங்கள், பிரஜா சக்தி வேலைத்திட்டம் உள்ளிட்ட சகல அடித்தள மட்ட நிறுவனங்களிலும் பதவிகளை பெலவத்த கட்சிக் அலுவலகமே தீர்மானிக்கின்றது. ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தச் சிவில் சமூகங்களில் பதவிகள் இல்லை. தனிக் கட்சி, தனி நிலைப்பாடு, தனி உத்தரவு, தனி ஆட்சி ஊடாக ஜே.வி.பி யின் அரசியல் ஆதிக்கம், அதிகாரம் என்பவற்றை முற்றிலுமாக உறுதிப்படுத்தும் செயல்களுக்கு அரசாங்கம் திரும்பியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 கனம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தை அழிக்கும் செயலாகும்.

இதனாலயே கனம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேங்கிக் கிடக்கும் வழக்குகளை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்றும், நீதித்துறையை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறிக்கொண்டு அரசாங்கம் ஜனநாயகத்தில் தலையீடு செய்து வருகின்றது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் கனம் நீதித்துறையின் சுதந்திரம் அழிக்கப்படுவதோடு இதன் மூலம் ஜனநாயகமும் வீழ்ச்சி காண்கின்றது. அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைமைகள்கூட இதனால் சீர்குலைந்து போகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

🟩 நீதித்துறை குறித்து மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் மங்கச் செய்கிறது.

தொடர்ச்சியாக இந்த அரசாங்கம் நிகழ்நிலை காப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக, சுதந்திர ஊடகங்களையும் சிவில் சமூகத்தையும் கட்டுப்படுத்தும் அதேவேளை, கனம் நீதித்துறையின் மீது பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்து நீதித்துறை என்ற நிறுவனம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாழடித்து, நீதியை நிலைநாட்டுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளை மீறி தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 அஸ்வெசும வெட்டப்படுவது போட்டிக்கு நடந்து வருகின்றது.

இன்று போட்டி போட்டுக் கொண்டு அஸ்வெசும உதவிகளை வெட்டி வருகின்றனர். நாட்டின் 30-40% ஆனவர்கள் வறுமைக்கோட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் தீர்வுகள் இல்லை. நாட்டில் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கத்தக்க அரசாங்கம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முற்படுகின்றது. IMF கோருவதைவிடவும் அதிகமான அளவில் வரிகளை விதித்து அரசாங்கம் அரச வருவாயை அதிகரித்துக்கொண்டுள்ளது. வரிச்சுமையால் அவதிப்படும் மக்களுக்குக் கூட இதனால் நிவாரணம் வழங்கியபாடில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனில் அவர்கள் 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து எமது நாட்டின் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக ஒரு வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கக்கூடியவர்கள் 60 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும், கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கும் போது 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை, கனம் நீதிபதிகளின் ஓய்வுபெறும வயதை அரசாங்கம் நீடிக்க முற்படுகின்றது. மக்களின் துயரம் குறித்து மேடைகளில் பேசியவர்கள் இன்று மேகக் கூட்டங்களுக்கு மத்தியில் உள்ளனர். நாட்டின் யதார்த்த நிலையை மறந்துவிட்டனர். மக்களின் இதயத்திலுள்ள துன்பம், கண்ணீர், வேதனை குறித்து அரசாங்கத்திற்கு எத்தகைய அக்கறையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 கனம்நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்.

நீதித்துறையின் கனம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை, குறிப்பாக உயர் நீதிமன்ற கனம் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் முக்கியமான முன்மாதிரிகள் காணப்படுவதனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது. மாறாக சர்வஜன வாக்கெடுப்பிற்குக் செல்ல வேண்டியது அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here