இம் முறை இடம் பெறுகின்ற உள்ளுராட்சி தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு மதுபான போத்தல் பெற்றுகொள்வதற்கு மாற்று கட்சிகளால் கூப்பன் வழங்கபட்டுள்ளமை தொடர்பில் தேர்தல் ஆளையாளர் மஹிந்ததேச பிரியவிடம் முறைபாடு.
ஊடகவியலாளர் சந்திப்பில் இ.தொ.கா.வின் உபதலைவர் எஸ்.அருள்சாமி தெரிவிப்பு.
இம் முறை இடம்பெறவிருக்கின்ற உள்ளுராட்சிசபை தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு டிக்கோயா பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் அமைச்சர் ஒருவர் மக்களுக்கு மதுபான தவரனைகளுக்கு சென்று மதுபானம் பெற்று கொள்வதற்கு கூப்பன்ங்கள் வழங்கபட்டுள்ளமை தொடப்பில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் முன்னால் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான எஸ்.அருள்சாமி தேர்தல் ஆனையாளர் மஹிந்த தேசபிரியவிடம் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக 25.01.2018.வியாழகிழமை கொட்டகலை தொண்டமான் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர் இந்த சம்பவம் குறித்து பெப்ரவரி மாதம் 01ம் திகதிமுதல் 10ம் திகதி வரை நுரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளில் கூப்பன்ங்களை பயன்படுத்தி மதுபான போத்தல்களை பெற்றுசெல்பவர்களை கைது செய்வதற்கு அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளதாக தேர்தல் ஆனையாளர் மஹிந்த தேசபிரிய ஊறுதி அழித்துள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.
மக்களுக்கு சேவைசெய்யகூடிய தலைவர்கள் மக்களை ஏமாற்றி நல்லாட்ச்சி யென கூறி மக்களை பாதாளகுழிக்குள் ஈட்டு செல்லுவோதோடு சில மலையக தலைவர்கள் இவர்களின் வங்குரோதனத்தை எடுத்து காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான செயல்களில் ஈடுபடுவர்களுக்கு இம் முறை இடம் பெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் எமது மலைய மக்கள் நிச்சயமாக சேவல் சின்னத்திற்கும் இலங்கை தொழிலாளர் காங்ரசிற்கும் வாக்களித்து எமது ஆறுமுகன் தொண்டமானை பலபடுத்துவார்கள்
எனவே இம்முறை தேர்தல் சட்டங்கள் கடுமையாக இருக்கின்ற வேலையில் எமது தேர்தல் ஆனையாளர் மஹிந்ததேசபிரிய அவர்கள் மீது எங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது. இம்முறை இடம்பெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலை முறையாக நடாத்திகாட்டுவார் அதுமட்டும் மல்ல மதுபானபோத்தல்களுக்கு கூப்பன் கொடுப்பவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுப்பதகவும் கூறியதாக தெரிவித்த அவர் எதிர் வரும் பெப்ரவரி 10திகதி யோடு மாற்று கட்சிதலைவர்கள் கானாமல் போய்விடுவார்கள் அதுமட்டுமள்ள இந்த தேர்தலில் வெற்றிவெற்று நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12சபைகளையும் இ.தொ.கா.கைபற்றுமெனவும் இ.தொ.கா.வின் உபதலைவர் குறிப்பிட்டார்.
பொகவந்தலாவ நிருபர்: எஸ்.சதீஸ்