வாடகைக்கு வீடு தருவதாகக் கூறி 60,000 டொலருக்கும் மேல் மோசடி: Brampton பெண் மீது 38 வழக்குகள்!

0
1
cp24

கனடாவின் (Canada) ஒன்ராறியோவிலுள்ள (Ontario) Brampton பகுதியைச் சேர்ந்த 27 வயதுப் பெண் ஒருவர், வாடகைக்கு வீடு தேடியவர்களிடம் 60,000 டாலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Peel Regional Police (PRP) தகவலின்படி, மே 2025 முதல் பெப்ரவரி 2026 வரையிலான காலப்பகுதியில், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வீடுகள் மற்றும் ‘Basement’ அறைகள் வாடகைக்கு உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதனை நம்பி உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டு, முதல் மற்றும் கடைசி மாத வாடகை முன் பணத்தை (Deposit) வழங்கிய குடியேறிகள், தங்களது பொருட்களுடன் குடிபோக வந்தபோது வீடுகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பலர் தங்களின் பழைய வீடுகளைக் காலி செய்துவிட்டு வந்த பின்னரே இந்த ஏமாற்றத்தை உணர்ந்துள்ளனர்.

இதுவரை 17 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் பணமோ அல்லது வீடோ திரும்பக் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஜூலை 13 அன்று Brampton-ஐச் சேர்ந்த Savreet Kaur (27) என்ற பெண் கைது செய்யப்பட்டு, அவர் மீது 38 மோசடி வழக்குகளும், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்கள் மூலம் வீடுகளை வாடகைக்கு எடுக்கும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here